தமிழ்நாடு

tamil nadu

கஞ்சா விற்பனையில் இறங்கிய மென்பொறியாளார் கைது!

By

Published : Feb 15, 2021, 9:42 PM IST

சென்னையில் கஞ்சா விற்பனை செய்த மென்பொறியாளரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

cannabis seized in chennai
cannabis seized in chennai

சென்னை: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

அசோக் நகர்ப் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு வந்த தகவலையடுத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மேற்கு மாம்பலம் அருகே ரஞ்சித் குமார்(22) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை பிடித்து விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு, ரஞ்சித் குமார் தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணிபுரிவது தெரிய வந்தது. ஆந்திராவிலிருந்து கஞ்சா வாங்கி சென்னையில் விற்பனை செய்வதை அவர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து ரஞ்சித் குமார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details