தமிழ்நாடு

tamil nadu

தேர்தலுக்கு தயாராகி வரும் வேலூர்...

By

Published : Oct 6, 2021, 12:23 AM IST

வேலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளை(அக்.6) குடியாத்தம்,பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், காட்பாடி ஆகிய ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

local body election
local body election

வேலூர்: தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நாளை(அக் 06) மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் நாளை(அக்.6) முதல் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், காட்பாடி ஒன்றியங்களில் மொத்தம் 682 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கண்காணிப்பு பணிகள்

கண்காணிப்பு பணிகள்

இதில் 84 வாக்குச்சாவடிகளில் நுண்பார்வையாளர்கள் கண்காணிக்கின்றனர். இங்கு நடைபெறும் வாக்குப்பதிவு நேரடியாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது. மீதமுள்ள 598 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். 1,200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

வாக்கு பதிவு செய்ய பயன்படுத்தப்படும் அனைத்து பொருள்களும் இன்று(அக்.5) குடியாத்தம்,பேரணாம்பட்டு, கே.வி.குப்பம், காட்பாடி ஆகிய ஒன்றிய அலுவலகங்களில் இருந்து வாக்குப் பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது. பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அனைத்து பொருள்களும் கொண்டு செல்லப்பட்டன.

முகவர்கள் செல்போன் கொண்டு வர தடை

வாக்குச்சாவடிகளில் ஒரு வேட்பாளருக்கு ஒரு முகவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நாளை(அக்.6) காலை 6 மணிக்கு முகவர்கள் அனைவரும் வாக்குச்சாவடிக்கு வந்து விட வேண்டும். அவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் திறக்கப்பட்டு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்.

தேர்தல் வேலை

முகவர்கள், வாக்காளர்கள் எவரும் கைப்பேசிகளை கொண்டு வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முகவர்கள் அல்லது வாக்காளர்கள் எவரேனும் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் அதனை கைப்பற்றி, காவல்துறையினரிடம் ஒப்படைப்பதுடன் வழக்குப் பதிய நேரிடும்.

மேலும், வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய வரும் அரசு பணியாளர்கள், ஆசிரியர்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலரை தவிர, வேறு எவரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது.

இதையும் படிங்க: காதலியை தினமும் பேச சொல்லுங்கள் - சிவபெருமானுக்கு கடிதம் எழுதிய பக்தர்..!

ABOUT THE AUTHOR

...view details