தமிழ்நாடு

tamil nadu

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க திமுக தீர்மானம்!

By

Published : May 30, 2022, 5:13 PM IST

திருச்சியில் நடைபெற்ற திமுகவின் செயற்குழு கூட்டத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் எம்எல்ஏ-வாக உள்ள உதயநிதி ஸ்டாலினை விரைவில் அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலான திமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயற்குழுக்குழு கூட்டம் இன்று (மே30) நடைபெற்றது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர், தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் வரும் ஜூன் 3ஆம் தேதி 'முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99ஆவது பிறந்த நாள் விழா'-வில் சிறப்பாக மாவட்ட கழக அலுவலகத்தில் கழகத்தின் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது மற்றும் கழக ஆக்கப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன், என்.கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன், செந்தில் மற்றும் மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் சிறப்பு தீர்மானமாக, சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ-வை அமைச்சராக்க ஒருமனதாக தீர்மானம்

இதையும் படிங்க: UPSC தேர்வு முடிவு வெளியீடு; முதல் மூன்று இடங்களில் பெண்கள் ராஜ்ஜியம்.. 42ஆவது இடத்தில் தமிழ்நாடு!

ABOUT THE AUTHOR

...view details