ETV Bharat / bharat

UPSC தேர்வு முடிவு வெளியீடு; முதல் மூன்று இடங்களில் பெண்கள் ராஜ்ஜியம்.. 42ஆவது இடத்தில் தமிழ்நாடு!

author img

By

Published : May 30, 2022, 3:14 PM IST

மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC) நடத்திய சிவில் சர்வீசஸ் (Civil Services Examinations) தேர்வில் 685 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவில் சர்வீசஸ்
சிவில் சர்வீசஸ்

புதுடெல்லி: 2021 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வு (Civil Services Examinations) முடிவுகள் இன்று (மே 30 ) வெளியாகின. இந்தத் தேர்வில், ஸ்ருதி ஷர்மா, அங்கிதா அகர்வால் மற்றும் காமினி சிங்லா ஆகியோர் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் ரேங்க் பெற்றுள்ளனர்.

மேற்படி, தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படாத நிலையில் மொத்தமாக 685 பேர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களில் 244 பேர் பொதுப் பிரிவினரும், 73 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினரும், 203 பேர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், 105 பட்டியல் சாதியினரும், 60 பேர் பழங்குடியினரும் ஆவார்கள்.

இந்திய நிர்வாகப் பணி (IAS), இந்திய வெளியுறவுப் பணி (IFS) மற்றும் இந்தியக் காவல் பணி (IPS) உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களுக்கு பூர்வாங்க, முதன்மை மற்றும் நேர்காணல் என மூன்று நிலைகளில் UPSC ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்துகிறது. தேர்வு எழுதப்பட்ட அல்லது முக்கிய பகுதி ஜனவரி, 2021இல் நடத்தப்பட்டது, மேலும் நேர்காணல் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டது. 80 வேட்பாளர்களின் வேட்புமனு தற்காலிகமானது, ஒரு வேட்பாளரின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதல் மூன்று இடங்களைத் தவிர, ஐஸ்வர்யா வர்மா நான்காவது இடத்தையும், உத்கர்ஷ் திவேதி ஐந்தாவது இடத்தையும் பெற்றனர். "UPSC வளாகத்தில் தேர்வு கூடத்திற்கு அருகில் 'எளிமைப்படுத்தல் கவுன்டர்' உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வுகள் / ஆட்சேர்ப்பு தொடர்பான எந்தத் தகவலையும்/ தெளிவுபடுத்தலையும் வேலை நாள்களில் 10:00 மணி முதல் 17:00 மணி வரை நேரிலோ அல்லது 23385271/ 23381125 /23098543 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்" என்று ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

யுபிஎஸ்சியின் இணையதளத்திலும் முடிவுகளைக் காண www.upsc.gov.in. முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 15 நாள்களுக்குள் இணையதளத்தில் மதிப்பெண்கள் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் 42ஆவது இடம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், “நாட்டின் முக்கியமான வளர்ச்சி நேரத்தில் பணியை தொடங்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் தொடங்கி வைத்த திட்டம் அதிமுக ஆட்சியில் அடித்தளமிட்டது: கடம்பூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.