தமிழ்நாடு

tamil nadu

ஒரு கையில் உலக சாதனை - 2ம் வகுப்பு சிறுமிக்கு குவியும் பாராட்டு!

By

Published : Jun 4, 2019, 9:09 PM IST

திருச்சி: இரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒரு கை சுற்றும் போட்டியில் 130 முறை தன் ஒரு கையை சுற்றி அசத்திக்காட்டி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

திருச்சி பெரிய கடை வீதி வெள்ளை வெற்றிலை காரத் தெருவில் கோட்டை மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு இரண்டாம் வகுப்பு படித்து வருபவர் சாய்னா ஜெட்லி. இவர் ஒரு கை சுற்று போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். குழந்தைகள் பிரிவில் ஒரு நிமிடத்திற்கு 130 முறை ஒரு கையை சுற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இவரது சாதனை நேபால் எவரெஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் சாய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சாதனை படைத்த மாணவி சாய்னா ஜெட்லியை, கோட்டை மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியை ரெஹ்னா பேகம் வாழ்த்தினார்.

இது குறித்து சாய்னாவின் தந்தை டிராகன் ஜெட்லீ கூறுகையில், "8, 9ம் வகுப்பு மாணவ மாணவிகள் பிரிவில் ஒரு கை சுற்றும் போட்டியில் 140 முறை சுற்றிதே உலக சாதனையாக உள்ளது. குழந்தைகள் பிரிவில் தற்போது சாய்னா ஜெட்லி ஒரு நிமிடத்தில் 130 முறை சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார். இது நேபாள எவரெஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது" என்றார்.

Intro:ஒரு கை சுற்றும் போட்டியில் திருச்சி மாநகராட்சி பள்ளி மாணவி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.


Body:திருச்சி: ஒரு கை சுற்றும் போட்டியில் மாநகராட்சிப் பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
திருச்சி பெரிய கடை வீதி வெள்ளை வெற்றிலை காரத் தெருவில் உள்ளது கோட்டை மாநகராட்சி பள்ளி. இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருபவர் சாய்னா ஜெட்லி. இவர் ஒரு கை சுற்று போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். குழந்தைகள் பிரிவில் ஒரு நிமிடத்திற்கு 130 முறை ஒரு கையை சுற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இவரது சாதனை நேபால் எவரெஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் சாய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனை படைத்த மாணவி சாய்னா ஜெட்லியை கோட்டை மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியை ரெஹ்னா பேகம் வாழ்த்தினார். இந்த சாதனை குறித்து கராத்தே வீரர் சாய்னாவின் தந்தையுமான டிராகன் ஜெட்லீ கூறுகையில், 8, 9ம் வகுப்பு மாணவ மாணவிகள் பிரிவில் ஒரு கை சுற்றும் போட்டியில் 140 முறை சுற்றிதே உலக சாதனையாக உள்ளது. குழந்தைகள் பிரிவில் தற்போது சாய்னா ஜெட்லி ஒரு நிமிடத்தில் 130 முறை சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார். இது நேபாள் எவரெஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது என்றார்.


Conclusion:இந்த சாதனை நேபாளம் எவரெஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details