தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம்

By

Published : Jan 31, 2022, 4:13 PM IST

தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடி நெல் கொள்முதல் செய்ய வேண்டும், நூறு நாள்கள் வேலைத்திட்டத்தில் விவசாயிகளைப் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

ayyakannu protest at trichy
திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம்

திருச்சி: தமிழ்நாடு அரசு விவசாயிகளின் நெல்லை ஆன்லைன் மூலம் கொள்முதல் செய்வதால் பல்வேறு குளறுபடிகள் நடப்பதால் ஆன்லைன் மூலம் பதிவுசெய்யும் முறையை ரத்துசெய்ய வேண்டும் எனவும்,

மத்திய அமைச்சர் அமித் ஷாவை 2009ஆம் ஆண்டு சந்தித்து கோதாவரி நதியிலிருந்து 250 டிஎம்சி நீரை தமிழ்நாடு நதிகள் பாலாறு, தென்பெண்ணை, காவிரி, வைகை, குண்டாறு ஆகிய நதிகளை இணைப்பதற்கு வாக்குறுதி கொடுத்து இதுவரை நிறைவேற்றவில்லை என்றும்,

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் ஆர்ப்பாட்டம்

மேகதாது அணையை காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக அரசு கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், நெல் குவிண்டாலுக்கு ரூ. 5000, ஒரு டன் கரும்புக்கு ரூ. 8000 மத்திய அரசு கொடுத்தால்தான் கட்டுப்படியாகும் என வலியுறுத்தியும்,

நூறு நாள்கள் வேலைத்திட்டத்தில் உள்ள விவசாயிகளை விவசாய வேலைக்கு பயன்படுத்த வேண்டும், விவசாயிக்கு காப்பீட்டுத் தொகையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும் என 20-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் திருச்சி மாவட்டம் எண் ஒன்று சுங்கச்சாவடியிலிருந்து சென்னையை நோக்கி ஊர்வலம் செல்ல தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டக்காரர்கள் முயன்றனர்.

இதனையடுத்து இந்த ஊர்வலப் போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்ததால், மாருதி நகர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இச்சம்பவத்தால் 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த மறியல் போராட்டத்தால் 30 நிமிடத்திற்கும் நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

போக்குவரத்தைச் சரி செய்யும்விதமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை, ஒருவழிப் பாதையாக மாற்றி போக்குவரத்தைச் சீரமைத்துவருகின்றனர்.

இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டி... அண்ணாமலை அறிவிப்பு...

ABOUT THE AUTHOR

...view details