தமிழ்நாடு

tamil nadu

அரசுப்பள்ளியில் படிக்கும் நீதிபதியின் மகன்- அரசு ஊழியர்களுக்கு முன்னுதாரணம்

By

Published : Jun 16, 2022, 1:39 PM IST

அரசுப்பள்ளியில் படிக்கும் நீதிபதியின் மகன்
அரசுப்பள்ளியில் படிக்கும் நீதிபதியின் மகன் ()

அவிநாசி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல் தன் மகனை கடந்த 8 ஆண்டுகளாக அரசு பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருபவர் வடிவேல். இவர் தனது மகன் நிஷாந்த் சக்தியை நேற்று அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்தார். அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க தயங்கும் சூழ்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

நிஷாந்த் சக்தி 1 மற்றும் 2ஆம் வகுப்புகளை கோவை, பெட்டதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியிலும், 3 முதல் 5ஆம் வகுப்பு வரை திருச்சி, மதுராபுரி அரசு நடுநிலைப்பள்ளியிலும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ஈரோடு, குமலன்குட்டை அரசு உயர் நிலைப்பள்ளியிலும் படித்து வந்தார். இதையடுத்து இன்று அவிநாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு சேர்ந்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக நீதிபதி தனது மகனை அரசு பள்ளியிலேயே படிக்கவைத்து வருவது அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களது குழந்தைகளை அவரவர் ஊர்களில் உள்ள அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக அமைந்ததுள்ளது.

இதையும் படிங்க:ஜூன் 20ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

ABOUT THE AUTHOR

...view details