தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடியில் மதச்சார்பற்ற இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

By

Published : Feb 13, 2022, 9:26 PM IST

ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் மதச்சார்பற்ற இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

தூத்துக்குடியில் மதசார்பற்ற இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் மதசார்பற்ற இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி:கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் மாணவர்கள் மதத்தை அடையாளப்படுத்தும் ஹிஜாப், காவித் துண்டுகள் போன்றவற்றை அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்குத் தடைவிதித்துள்ளதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதச்சார்பற்ற இயக்கங்கள் சார்பில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் இக்பால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சங்பரிவார் அமைப்புகளைத் தடைசெய்யக் கோரியும், மாணவிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர்களைக் கைதுசெய்யக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தூத்துக்குடியில் மதச்சார்பற்ற இயக்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

இது குறித்து இக்பால் செய்தியாளரிடம் தெரிவிக்கையில், “இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிவது தங்களது அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதில் தலையிடுவதற்கு எந்த அமைப்பினருக்கும் உரிமை கிடையாது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துவரக் கூடாது என சங்பரிவார பயங்கரவாத அமைப்புகள் மாணவிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளன.

இதை அங்குள்ள பாஜக அரசும் ஆதரிப்பதாகத் தெரிகிறது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றமும் இந்த விவகாரம் முடிவுக்கு வரும்வரை ஹிஜாப் அணிய வேண்டாம் எனக் கூறி உள்ளது.

ஆகவே, மத்தியில் பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்துவருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஹிஜாப் விவகாரத்தை முன்னெடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: மும்பையிலும் ஹிஜாபுக்குத் தடை

ABOUT THE AUTHOR

...view details