மும்பையிலும் ஹிஜாபுக்குத் தடை

author img

By

Published : Feb 11, 2022, 1:27 PM IST

மும்பையிலும் ஹிஜாபுக்கு தடை

கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்ட விவகாரத்தில் நாடு முழுவதும் அதிர்வலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மும்பையிலும் கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மும்பை: கடந்த சில நாள்களாக கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடைவிதிக்கப்பட்டது. குறித்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் மும்பையிலும் இதுபோன்ற தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி விதிமுறை புத்தகத்தில், ஹிஜாப், துப்பட்டா போன்றவற்றை அணிந்துவர தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் கல்லூரியின் முதல்வர் லினா ராஜே கூறியிருப்பதாவது, ”கல்லூரியில் அப்படி ஒரு விதிமுறை இருப்பது உண்மைதான். ஆனால் அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நமது அடையாளமான முகத்தை மறைப்பது கல்லூரி வளாகத்திற்குள் மறைக்கும்விதமாக உடை அணிவது கல்லூரியில் தடைசெய்யப்பட்டுள்ளது.

மும்பை
மும்பை

இதனால் ஹிஜாப் மட்டுமின்றி முகத்தை மறைக்கும் வகையில் துப்பட்டா மாதிரியான துணிகளைப் பயன்படுத்துவது கல்லூரியில் தடைசெய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ரயீஸ் ஷேக், “மகாராஷ்டிராவில் செயல்படும் கல்லூரிகளில் இது மாதிரியான விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டால் அதற்கு நிச்சயம் நாங்கள் எதிர்ப்போம்.

இது மாதிரியான விதிமுறைகளை கல்லூரிகளில் பின்பற்றப்பட்டால் அதனை கல்லூரி நிர்வாகம் உடனே ரத்துசெய்ய வேண்டும். மேலும், மகாராஷ்டிரா அரசு இந்தப் பிரச்சினை குறித்து கவனம் செலுத்த வேண்டும்” எனத் தனது கருத்தைப் பதிவுசெய்துள்ளார்.

மும்பை
மும்பை

இதையும் படிங்க: விவகாரம் முடியும்வரை மாணவர்கள் ஹிஜாபோ காவியோ அணியத்தடை: கர்நாடக உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.