தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி பெண் நிர்வாகி மீது இந்து முன்னணி புகார்

By

Published : Jun 18, 2022, 5:32 PM IST

நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆவேசமாக பேசிய எஸ்டிபிஐ கட்சியின் பெண் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து முன்னணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.

ஆவேசமாக பேசிய எஸ்டிபிஐ கட்சியின் பெண் நிர்வாகி
ஆவேசமாக பேசிய எஸ்டிபிஐ கட்சியின் பெண் நிர்வாகி

திருநெல்வேலி: பேட்டை மல்லிமால் தெருவில் நேற்று மத்திய அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட மகளிரணி தலைவி ஜன்னத் ஆலிமா பேசினார்.

அப்போது அவர், வடநாட்டில் தீப்பற்றி எரிகிறது. உங்களால் சமாளிக்க முடிகிறதா, சமாளிக்க முடியவில்லை. இஸ்லாமியர்ளுக்கு ஒரு மணி நேரம் டைம் கொடுத்து பாருங்கள். இந்தியாவில் ஒரு சங்கி கூட உயிரோடு இருக்கமாட்டார்கள் என்று ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.

ஆவேசமாக பேசிய எஸ்டிபிஐ கட்சியின் பெண் நிர்வாகி

இந்த நிலையில் எஸ்டிபிஐ பெண் நிர்வாகி பேசிய இந்த பேச்சு இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு மிரட்டல் விடுப்பது போன்று இருப்பதாக கூறி, இந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர், ஜன்னத் ஆலிமா பின்னணியில் பல பயங்கரவாதிகள் இது போன்று கொலை செய்வதற்கு தயாராக இருப்பது தெரிகிறது. எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:காவிரியின் உரிமையை காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details