தமிழ்நாடு

tamil nadu

நெல்லையில் கந்துவட்டி வசூலித்த திமுக முக்கிய பிரமுகர் கைது

By

Published : Jun 18, 2022, 9:01 PM IST

நெல்லையில் கந்துவட்டி வசூலித்த திமுக முக்கிய பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

திமுக முக்கிய பிரமுகர் கைது
திமுக முக்கிய பிரமுகர் கைது

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் நெல்லை மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச் செயலாளராக உள்ளார். இவரிடம் பேட்டையை அடுத்த சுத்தமல்லியை சேர்ந்த நாகராஜ் என்பவர் ரூ.5 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் நெல்லை சந்திப்புக்கு வந்த நாகராஜிடம் கந்துவட்டி கேட்டு கண்ணன் மிரட்டி உள்ளார். இதுகுறித்து நாகராஜ் சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதனை அடுத்து சந்திப்பு காவல் ஆய்வாளர் ஷோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து கண்ணனை சந்திப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.

அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:'காவிரியின் உரிமையை காக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடும்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details