தமிழ்நாடு

tamil nadu

ஸ்விகி, சொமாட்டோ ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்

By

Published : Aug 18, 2022, 10:22 AM IST

தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் இன்று வெளியாவதை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இலவச பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்
இலவச பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்

நெல்லை: மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் இன்று (ஆகஸ்ட் 18) திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர் .

7 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் தனுஷ் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் தனுஷ் நடித்து பிரம்மாண்ட வெற்றி கண்ட கர்ணன் படத்தை தொடர்ந்து, ஓராண்டுக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் திரையரங்குகளில் வெளியானது. கடந்த ஒரு ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், மாறன், அத்ராங்கி ரே, தி கிரே மேன் ஆகிய 4 படங்கள் ஓ.டி.டி. தளங்களில் நேரடியாக வெளியானது.

ஸ்விகி சொமாட்டோ ஊழியர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கிய தனுஷ் ரசிகர்கள்

இதனால் திருச்சிற்றம்பலம் படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் பல்வேறு வழிகளில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தினர் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை வரவேற்க திரையரங்களில் பிளக்ஸ் போர்டுகள் மற்றும் கட்டவுட்டுகள் வைத்துள்ளனர்.

திருச்சிற்றம்பலம் படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் ஊழியராக நடித்து அவர்கள் படும் இன்னல்களை திரையில் காட்டியுள்ளார். இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு, நெல்லை மாவட்டத்தில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களை தனுஷ் ரசிகர்கள் கௌரவித்தனர்.

நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர் மன்ற தலைவர் காமராஜ் தலைமையில் தனுஷ் ரசிகர்கள் ஸ்விக்கி சுமோட்டா போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களில் பணி செய்யும் சுமார் 50 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வீதம் வழங்கி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தளபதி 67 வில்லன்கள் லிஸ்ட்டில் இணையும் கௌதம் மேனன்

ABOUT THE AUTHOR

...view details