ETV Bharat / entertainment

தளபதி 67 வில்லன்கள் லிஸ்ட்டில் இணையும் கௌதம் மேனன்

author img

By

Published : Aug 17, 2022, 1:20 PM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 67ஆவது திரைப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தளபதி 67ல் வில்லனாகும் கௌதம் மேனன்
தளபதி 67ல் வில்லனாகும் கௌதம் மேனன்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர். மேலும், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என நிறைய வெற்றிப்படங்களை கொடுத்தவர். முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய இவர், நடிகர் விஜயை வைத்து படம் இயக்கியதில்லை.

2012ஆம் ஆண்டு, விஜய் நடிப்பில் ‛யோஹன் அத்தியாயம் ஒன்று' என்ற பெயரில் படத்தை கௌதம் மேனன் இயக்க இருப்பதாகக் கூறப்பட்டது. அந்தப் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்போவதாக அவர் அறிவித்தார். படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, படத்தின் முழுக் கதையையும் கௌதம் மேனன், நடிகர் விஜயிடம் சொல்லாததால் அந்த படத்தில் அவர் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே ’யோஹன் அத்தியாயம் ஒன்று’ திரைப்படம் அப்போது கைவிடப்பட்டது. இந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 67ஆவது படத்தில் கௌதம் மேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேங்ஸ்டர் கதை அம்சத்தில் உருவாகும் இந்த படத்தில், மொத்தம் ஆறு வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகர் அர்ஜுன், மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. அந்த பட்டியலில், கௌதம் மேனனும் தற்போது இணைந்துள்ளார். அந்த வகையில் விஜய்யுடன் இயக்குநராக இணைய முடியாத கௌதம் மேனன், இப்போது அவர் படத்தில் வில்லனாக இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்காலத்தடை - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.