தமிழ்நாடு

tamil nadu

கூடங்குளம்: 2ஆவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

By

Published : Nov 24, 2021, 11:39 AM IST

கூடங்குளம் அணுமின் நிலையம்
கூடங்குளம் அணுமின் நிலையம் ()

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியதில், தற்பொழுது முதற்கட்டமாக 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.

திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் இயங்கிவருகின்றன. இதில் இரண்டாவது அணு உலையில் டர்பனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கடந்த 18ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஏற்கனவே மூன்று மாத பராமரிப்புப் பணிகளுக்காக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, சமீபத்தில்தான் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கியது.

தொடங்கிய சில நாள்களிலேயே டர்பனில் தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டதால், தொழில்நுட்பப் பணியாளர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. அதன்பின் கோளாறை சரிசெய்யும் பணியில், பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தற்போது டர்பன் தொழில்நுட்பக்கோளாறு சரிசெய்யப்பட்டு, இரண்டாவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. இருப்பினும் முதற்கட்டமாக தற்பொழுது 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.

மேலும், படிப்படியாகத்தான் மின் உற்பத்தி அதிகரித்து, முழு அளவான ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என அணுமின் நிலைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே முதல் அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: ஆய்வுக்கு வந்த மத்திய குழு - ஹிந்தியில் புகார் அளித்த விவசாயிகள்

ABOUT THE AUTHOR

...view details