தமிழ்நாடு

tamil nadu

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சிறுமி கடத்தல்: இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை

By

Published : Aug 7, 2021, 10:18 AM IST

சேலத்தில் திருமண ஆசைகாட்டி 17 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

youth punished under pocso for abducting girl in Salem
youth punished under pocso for abducting girl in Salem

சேலம்:மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தம் அருகில் உள்ள கூத்தனார் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் அங்கமுத்து (21) அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, 2018 ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் மேட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அங்கமுத்துவை கைதுசெய்தனர். இவ்வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், சிறுமியைக் கடத்திச் சென்ற இளைஞர் அங்கமுத்துவுக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:பாலியல் வழக்கு: 15 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details