தமிழ்நாடு

tamil nadu

செம்மண் கடத்தலில் திமுக பிரமுகர் - நடவடிக்கை எடுக்க விவசாயி கோரிக்கை!

By

Published : Jan 18, 2022, 10:31 PM IST

விவசாயி ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் சட்டவிரோதமாக நுழைந்து செம்மண் கடத்தலில் ஈடுபட்ட திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

நடவடிக்கை
நடவடிக்கை

சேலம்: மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே பனங்காட்டூரைச் சேர்ந்தவர் விவசாயி ராஜமாணிக்கம்(76). இவருக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாயநிலம் பனங்காட்டூர் கிராமத்தில் உள்ளது.

இவர் நிலத்திற்கு அருகிலேயே நங்கவள்ளி ஒன்றிய 10ஆவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வியின் கணவர் ராஜேஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது.

சட்ட விரோதமாக செம்மண் கடத்தி விற்பனை

இந்த நிலையில் திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ராஜேஸ்வரன், விவசாயி ராஜமாணிக்கத்தின் நிலத்தில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாகச் செம்மண் கடத்தி விற்பனை செய்து வருகிறார்.

அத்துமீறி விவசாயியின் நிலத்தில் செம்மண் திருட்டு

இதுதொடர்பாக ராஜமாணிக்கம் வருவாய்த்துறை மற்றும் காவல் துறையிடம் பலமுறை புகார் அளித்துள்ளார். அலுவலர்கள் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்துள்ளனர்.

நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

இதுகுறித்து விவசாயி ராஜமாணிக்கம் கூறுகையில், 'ராஜேஸ்வரன் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் அரசு அலுவலர்கள் அவர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக அவர் நடத்தி வரும் செம்மண் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆஸ்கர் அகாடெமி சேனலில் ஜெய் பீம்..! : ஆஸ்கர் சேனலில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம்

ABOUT THE AUTHOR

...view details