ETV Bharat / sitara

ஆஸ்கர் அகாடெமி சேனலில் ஜெய் பீம்..! : ஆஸ்கர் சேனலில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம்

author img

By

Published : Jan 18, 2022, 6:49 PM IST

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில்,இத்திரைப்படத்தின் காட்சிகள் உலகப்புகழ் பெற்ற 'ஆஸ்கர் விருதுகளின்' யூ-ட்யூப் சேனலில் திரையிடப்பட்டதின் மூலம், ஆஸ்கர் அகாடெமி சேனலில் திரையிடப்படும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

ஆஸ்கார் அகாடெமி சேனலில் ஜெய் பீம்..! : ஆஸ்கார் சேனலில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம்
ஆஸ்கார் அகாடெமி சேனலில் ஜெய் பீம்..! : ஆஸ்கார் சேனலில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம்

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படமாக சூர்யா நடிப்பில், த.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தைக் கூறலாம்.

இருளர்கள் வாழ்வியல் உள்ள சிக்கல்களையும் பிரச்னைகளையும் நீதியரசர் சந்துருவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.

ஆஸ்கரில் ஜெய் பீம்:

இத்திரைப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்களினாலும், விமர்சகர்களினாலும் பெரும் வரவேற்பைப்பெற்றது.

பல அரசியல் கருத்துகளை வைத்தமையால் பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளானது. எனினும்,பல்வேறு விமர்சகர்களும் திரைப்பட ரசிகர்களும் இந்தத் திரைப்படத்தை பாராட்டியும்,புகழுரைகள் எழுதியும் கொண்டாடினர்.

இந்நிலையில்,இத்திரைப்படத்தின் காட்சிகள் உலகப்புகழ்பெற்ற 'ஆஸ்கர்' யூ-ட்யூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இதன்மூலம் ஆஸ்கர் யூ-ட்யூப் சேனலில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை 'ஜெய் பீம்' பெற்றுள்ளது. இதற்கு முன்பு இத்திரைப்படம் உலகப் புகழ்பெற்ற விருதான 'கோல்டன் குளோப் விருதுகள் 2022இல்'(Golden globes 2022) பங்கேற்க இருந்தது.

மேலும், இந்தத்திரைப்படம் ஐஎம்டிபி(IMDB Ratings) வரிசையில் ’சாஸாங் ரிடம்சன்(shawshank redemption)', ’காட் பாதர்(God father)’ போன்ற உலகத் திரைப்படங்களை முந்திய வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'காசு, புகழ வைச்சு என்ன பண்ண?' - வருத்தத்தின் உச்சத்தில் ரஜினி ரசிகர்கள்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.