தமிழ்நாடு

tamil nadu

'உபா சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்' - பேராசிரியர் முரளி

By

Published : Feb 13, 2020, 10:14 AM IST

மதுரை: பாஜக ஆட்சியில் கொள்கை முழக்க கோஷமிட்டால் உபா சட்டத்தில் கைது செய்யும் அவலம் நிலவுவதால் உபா சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்று பேராசிரியர் முரளி தெரிவித்துள்ளார்.

PUCL Murali latest press meet
PUCL Murali latest press meet

ஜனநாயக மனித உரிமை அமைப்புகளின் சார்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மக்கள் சிவில் உரிமை கழக தேசிய செயலர் பேராசிரியர் இரா. முரளி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "உரிமைக்காகப் போராடும் சமூகச் செயற்பாட்டார்களை உபா (UAPA) சட்டத்தில் கைது செய்து மிரட்டுகிறது தமிழ்நாடு அரசு.

மத்திய அரசின் ஊதுகுழலாக இருக்கும் எடப்பாடி அரசு தமிழ்நாட்டில் உபா சட்டத்தின் கீழ் 1,000 பேரைக் கைது செய்துள்ளது. கொள்கை முழக்க கோஷமிட்டால் உபா சட்டத்தில் கைது செய்யும் அவலம் நிலவுகிறது.

பேராசிரியர் முரளி செய்தியாளர் சந்திப்பு

தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எத்தகைய போராட்டம் நடத்தினாலும் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுவருகிறது. சமூகச் செயல்பாட்டாளர்களின் போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் கொடூரமான உபா சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். கேரளாவில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் சகோதரியின் குடும்பத்தினர் மீது தொடுக்கப்பட்ட உபா சட்ட வழக்கினை ரத்து செய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: காமராஜர் பல்கலைக்கழக விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரம்: 6 பேர் இடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details