தமிழ்நாடு

tamil nadu

மதுரை ரயில் நிலையம் ரூ.359 கோடியில் புனரமைப்பதற்கான ஒப்பந்தபுள்ளி வெளியீடு!

By

Published : Aug 3, 2022, 1:15 PM IST

மதுரை ரயில் நிலையம்
மதுரை ரயில் நிலையம் ()

தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த மதுரை ரயில் நிலையம் ரூ.358.63 கோடியில் புனரமைக்க ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது

மதுரை, சென்னை, ராமேஸ்வரம், காட்பாடி உட்பட ஐந்து ரயில் நிலையங்கள் அதிநவீன ரயில் நிலையங்களாக மாற்ற மே 26ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தை புனரமைக்க 358.63 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்த புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்டுமான பணியினை 26 மாதங்களுக்குள் முடிக்க ஐஆர்சிஓஎன் - இன்டர்நேஷனல் லிமிடெட் உத்தரவு விட்டுள்ளது.

மேலும் பார்சல் சேவைக்கு தனி வளாகம், பல்லடுக்கு வாகன காப்பகம், சுரங்கப்பாதை கூடுதல் அலுவலக கட்டிடம் என சுமார் 16 வகையான பணிகள் மேற்கொள்ளவும், விருப்பமுள்ள கட்டுமான நிறுவனங்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இந்தியன் ரயில்வேயின் கீழ் செயல்படும் இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் ஒப்பந்த புள்ளியை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:அரசு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details