தமிழ்நாடு

tamil nadu

மதுரை மீனாட்சி கோயிலில் அக்.7 முதல் அக்.15 வரை நவராத்திரி திருவிழா

By

Published : Oct 4, 2021, 10:28 PM IST

மதுரை மீனாட்சி கோயிலில் அக்.7 முதல் அக்.15 வரை நவராத்திரி திருவிழா
மதுரை மீனாட்சி கோயிலில் அக்.7 முதல் அக்.15 வரை நவராத்திரி திருவிழா

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் நவராத்திரி திருவிழா, இம்மாதம் வருகிற 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

மதுரை:உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் நவராத்திரி திருவிழா, இம்மாதம் வருகிற 7ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சந்நிதியின் 2ஆம் பிரகாரத்தில் அமைக்கப்படும் நவராத்திரி கொலு மண்டபத்தில், மீனாட்சியம்மன் ராஜராஜேஸ்வரி, ஊஞ்சல், கோலாட்டம், பாணபத்திரருக்கு திருமுகம் கொடுத்தல், மகிஷாசுரமர்த்தினி, சிவ பூஜை வெவ்வேறு அலங்காரங்களில், 9 நாட்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

காலையில் மூலவருக்கு அர்ச்சனை கிடையாது


இந்த உற்சவ நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் மீனாட்சி அம்மன், மூலஸ்தானம் சந்நிதியில் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகிய கல்ப பூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விசேஷ பூஜைகள் இரவு 8.30 மணி வரையில் நடைபெறும்.

எனவே, காலை நேரங்களில் பக்தர்களுக்குப் பூஜை அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படமாட்டாது எனவும், கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்குத்தான் அர்ச்சனைகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

அக்.7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரையில், காலை 5.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டு முதல்நாள் மூலஸ்தான அம்மன் அலங்காரத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிப்படுவர் எனவும், இதில் அக்.8, 9, 10 (வெள்ளி,சனி,ஞாயிறு) ஆகிய தேதிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொலு சாவடியில் கொலு அலங்கார பொம்மைகள், சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் சம்பந்தமான பொம்மைகள் மற்றும் இதர பொம்மைகளை உபயமாக வழங்குபவர்கள் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கோயில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வாழை இலையில் அன்னதானம்

ABOUT THE AUTHOR

...view details