தமிழ்நாடு

tamil nadu

இந்தியில் மட்டுமே வகுப்பா..? - சு.வெங்கடேசன் எம் பி கண்டனம்

By

Published : Oct 24, 2021, 8:21 PM IST

சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்
சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்

ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டும் இணைய வகுப்பு நடத்துவதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மதுரை:இதுகுறித்து இன்று(அக்.24) அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ரயில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்து, ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டும் இணைய வகுப்பு நடத்துவதை கண்டித்து ரயில்வே அமைச்சருக்கும், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.

அதில், ரயில்வே மருத்துவமனைகளில் புதிய நிர்வாக தகவல் அமைப்பு முறை அமல்படுத்துவதற்காக மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

அந்த பயிற்சி அக்டோபர் 21 முதல் 29 தேதி வரை இணையவழியில் நடைபெறுகிறது. இதில் பயிற்று மொழியாக இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள ஊழியர்கள் ஒன்றும் புரியாமல் தவிக்கிறார்கள். பயிற்சியும் பயனற்றுப் போகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் பணியாற்றும் மருத்துவ ரயில்வே ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இந்த பயிற்சியை இந்தியில் மட்டும் நடத்துவதை கண்டிக்கிறேன். அதனை தமிழிலும், இந்தி அல்லாத மொழிகளிலும் நடத்த வேண்டும் என்று கோருகிறேன்.

அதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை என்றால் குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் தனியாக இணையவழி வகுப்பு ஏற்பாடு செய்ய கோருகிறேன். அதுவரை இந்தி பேசாத மாநில ஊழியர்கள் இந்த வகுப்பில் கலந்து கொள்ள விதிவிலக்கு அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:இல்லம் தேடி கல்வி திட்டம் அக்.27இல் மரக்காணத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details