தமிழ்நாடு

tamil nadu

ஹோலி: மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் வண்ணம் பூசி கொண்டாட்டம்

By

Published : Mar 10, 2020, 12:24 PM IST

மதுரை: ஹோலி பண்டிகையை முன்னிட்டு மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள், வண்ணம் பூசியும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Holi Celebration
Holi Celebration

ஆண்டுதோறும் கோடை காலம் தொடங்குவதையொட்டி வசந்த விழாவாக ஹோலி பண்டிகையை வட இந்தியர்கள் கொண்டாடுவது வழக்கம். அதன்படி, நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுவருகிறது.

இதன் ஒருபகுதியாக, மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் 100-க்கும் மேற்பட்டோர், ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

Holi Celebration

அப்போது, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள், தங்களது குழந்தைகளுடன் பரஸ்பரம் இனிப்புகள் வழங்கியும், வண்ணப் பொடிகளை முகத்தில் பூசியும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க: பொருளாதாரச் சிக்கலுக்கு காரணம் இதுதான்: நிதித் துறை இணையமைச்சர் விளக்கம்

ABOUT THE AUTHOR

...view details