மதுரை: மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 52ஆவது ஆண்டு உதய தினம் நேற்று (மார்ச் 10) கொண்டாடப்பட்டது.
இதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை தளபதி (Commandant) உமாமகேசுவரன், உதவி தளபதி கனிஷ்க், படைவீரர்கள் அணிவகுப்புடன் நடைபெற்ற விழாவில் மதுரை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில், 1959ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை மத்திய அரசின்கீழ் அதன் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகம், விமான நிலையம், ராணுவ தளவாட தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணியாற்றி வருகின்றது. அவர்களின் பணி அர்ப்பணிப்புடன் கூடியது. அவர்களின் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகள்' எனக் கூறினார் .
மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்புடன் கமாண்டோ வீரர்களின் சாகசங்கள், மோப்ப நாய்களின் அணிவகுப்பு ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றன. மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பது குறித்து செயல்முறை விளக்கமும் நடைபெற்றது.
இதையும் படிங்க:தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் கடைப்பிடித்து மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி