தமிழ்நாடு

tamil nadu

காரில் சென்று ஆட்டுக்குட்டி திருடிய வழக்கு - 3 பேர் கைது!

By

Published : Oct 22, 2020, 10:28 AM IST

மதுரை: காரில் சென்று ஆட்டுக்குட்டி திருடிய வழக்கில் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

3-arrested-for-stealing-lamb
3-arrested-for-stealing-lamb

மதுரை கரும்பாலை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி. அவருக்கு சொந்தமாக 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இந்த நிலையில், மதுரை சட்டக் கல்லூரி எதிரே உள்ள சாலையோரமாக ஆடுகளை கட்டிவைத்துள்ளார்.

அப்போது அங்கு பிரபல டாக்ஸி நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட காரில் வந்த சிலர், அனைத்து ஆடுகளையும் ஒவ்வொன்றாக காரில் ஏற்றி திருடிச்சென்றனர்.

அதனால் முத்துப்பாண்டி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய போலீசார் மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ராம்குமார், அழகு சுந்தர பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ஆட்டுக்குட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க:பிரபல கால்டாக்சி நிறுவனத்தின் காரில் வந்து ஆடு திருடும் கும்பல் - சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details