தமிழ்நாடு

tamil nadu

தடுப்பூசி போட்டால் 2 சென்ட் வீட்டுமனை, ஸ்மார்ட்போன் இலவசம்

By

Published : Sep 19, 2021, 3:09 PM IST

home-plat-smartphone-gift-for-vaccinators

பின்வரும் மாவட்டங்களில் இன்று(செப்.19) நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு வீட்டுமனை பட்டா, ஸ்மார்ட்போன் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசு தடுப்பூசி விழுக்காட்டை அதிகபடுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.

இதன் ஒருபகுதியாக செப்டம்பர் 12ஆம் தேதி மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்மூலம் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டர்.

இதையடுத்து இன்றும் மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த நிலையில்,

திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மாவட்ட நகராட்சியில் இன்று நடைபெறும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் ரூ. 10000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன் வழங்கப்படும். மொத்தம் மூன்று பேருக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல ஈரோடு மாவட்டம் பவானி தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் இன்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளுபவர்களில் 25 பேர் குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுவார்கள். அவர்களில் 10 பேருக்கு வீட்டுமனை, 4 பேருக்கு தங்க நாணயம், வெள்ளி விளக்குகள் மற்றும் 10 பேருக்கு வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் வீட்டுமனை பட்டா!

ABOUT THE AUTHOR

...view details