தமிழ்நாடு

tamil nadu

VIRAL VIDEO: தள்ளுவண்டி வியாபாரியை பாஜகவினர் தாக்கும் காணொலி

By

Published : Jan 13, 2022, 10:22 PM IST

BJP members attacked the roadside fruit seller
தள்ளுவண்டி வியாபாரியை பாஜகவினர் தாக்கும் வீடியோ ()

கோயம்புத்தூரில் தள்ளுவண்டி வியாபாரியை பாஜகவினர் தாக்கிய காணொலி காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

கோயம்புத்தூர்: பிரதமர் மோடி கடந்த 5ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் சென்றபொழுது சில அமைப்புகள் போராட்டம் நடத்தியதில் பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் ரத்துசெய்யப்பட்டது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் பாஜகவினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 12) திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் பாஜக சிறுபான்மையினர் அணி சார்பாக மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின்பொழுது தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் மோடியை விமர்சித்ததாகக் கூறி ஆத்திரமடைந்த பாஜகவினர் கடுமையாகத் தாக்கினர்.

தள்ளுவண்டி வியாபாரியை பாஜகவினர் தாக்கும் காணொலி

இதனையடுத்து அந்த வியாபாரி ஒரு கடைக்குள் பதுங்கிய நிலையில், பாஜகவினர் தொடர்ந்து சென்று அவரைத் தாக்க முற்பட்டனர். இதனிடையே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர் தள்ளுவண்டி வியாபாரியை பாதுகாப்புடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் பல்லடம் பகுதி அம்மா பாளையத்தைச் சேர்ந்த முத்துச்சாமி என்பதும், பல ஆண்டுகளாகத் தள்ளுவண்டியில் பழங்கள் விற்பனை செய்துவருவதும் தெரியவந்தது. மேலும் அவர், ஆர்ப்பாட்டத்தின்போது மோடியை விமர்சிக்கவில்லை. தள்ளுவண்டியை நகர்த்த முடியாமல் பாஜகவினர் போராட்டம் மேற்கொண்டதால் போராட்டம் முடிந்துவிட்டதே சற்று நகருங்கள் என்று நான் கூறினேன். அதனை அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு என்னைத் தாக்கினர் எனத் தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தாக்குதலில் ஈடுபட்ட பாஜகவைச் சேர்ந்த ஏழு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து பாஜக பல்லடம் பகுதி இளைஞரணிச் செயலாளர் ரமேஷ், பல்லடம் தெற்கு ஒன்றியத் தலைவர் ராஜ்குமாரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் பாஜகவினர் மோடியை விமர்சித்ததாக அளித்த புகாரின்பேரில், தள்ளுவண்டிக்காரர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தள்ளுவண்டி வியாபாரியை பாஜகவினர் சரமாரியாகத் தாக்கிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: போலி தங்கக் கட்டிகள் மோசடி - மூன்று பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details