தமிழ்நாடு

tamil nadu

கோவையில் வடமாநில லாரி ஓட்டுநர்கள் ஹூக்கா புகைக்கும் வீடியோ வைரல்

By

Published : May 13, 2022, 9:34 AM IST

ஹூக்கா புகைக்கும் வீடியோ

கருமத்தம்பட்டி பகுதியிலுள்ள தாபா ஒன்றில் வடமாநில லாரி ஓட்டுநர்கள் ஹூக்கா புகைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோயம்புத்தூர்: வடமாநிலங்களில் இருந்து கோவைக்கு தினமும் ஏராளமான கனரக வாகனங்களில் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது‌. இதன் காரணமாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான வடமாநில தாபாக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த தாபாக்களில் சமீபகாலமாக உணவருந்தி விட்டு ஓய்வெடுக்கும் வடமாநில லாரி ஓட்டுநர்கள் ஹூக்கா புகைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை உறுதிபடுத்தும் விதமாக கருமத்தம்பட்டி பகுதியிலுள்ள தாபா ஒன்றில் வடமாநில லாரி ஓட்டுநர்கள் ஹூக்கா புகைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹூக்கா புகைக்கும் வீடியோ

தமிழ்நாட்டில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேவேளையில், கோவை புறநகர பகுதிகளில் செயல்பட்டு வரும் தாபாக்களில் பரவத் தொடங்கி இருக்கும் ஹூக்கா போதைப் பயன்பாட்டு கலாச்சாரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதையும் படிங்க:காஷ்மீரில் பண்டிட் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details