தமிழ்நாடு

tamil nadu

தமிழ் மன்னன் நரகாசுரனின் இறப்பைக் கொண்டாடக்கூடாது - கு.ராமகிருட்டிணன்

By

Published : Nov 4, 2021, 10:02 PM IST

Tptk
Tptk

தமிழ் வம்சாவளியில் வந்த நரகாசுரனின் இறப்பினை கொண்டாடக்கூடாது எனவும்; வீரவணக்கம் செலுத்தும் நாளாக கருத வேண்டும் எனவும் தந்தை பெரியார் திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார்.

கோயம்புத்தூர்:கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நரகாசூரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்புரையாற்றிய தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தமிழர்களின் மூதாதையரான நரகாசுரனின் இறப்பு கொண்டாடப்படிக்கூடிய விழா அல்ல எனவும், வீர வணக்கம் செலுத்த வேண்டிய நாள் எனவும் தெரிவித்தார்.

தமிழ் மன்னனின் இறப்பைக் கொண்டாடக்கூடாது

தமிழ் வம்சாவளியில் வந்த மன்னன் நரகாசுரனின் இறப்பிற்கு வீரவணக்கம் செலுத்தும் நாளை தமிழர்களே வெடி வைத்து, இனிப்பு வழங்கி கொண்டாடக் கூடாது எனவும் அவர் கூறினார்.

நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தக்கூடிய கூட்டத்தினர்

மேலும் ஆண்டுதோறும், தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்பதை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவே மாவீரன் நராகசுரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: எனக்கு எதிரி யார் என்பதை நான் தான் தீர்மானிப்பேன் - சீமான்

ABOUT THE AUTHOR

...view details