தமிழ்நாடு

tamil nadu

மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

By

Published : Feb 1, 2022, 4:57 PM IST

Updated : Feb 1, 2022, 6:33 PM IST

பொள்ளாச்சியிலுள்ள புகழ்ப் பெற்ற மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா விமரிசையாகத் தொடங்கியது.

மாசாணியம்மன்
மாசாணியம்மன்

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்திப் பெற்ற மாசாணியம்மன் கோயில் உள்ளது.

இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளாமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தத் திருக்கோயிலில் நடக்கும் குண்டம் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது.

குண்டம் திருவிழா

இந்தத் திருவிழா 18 நாள்கள் வரையில் நடக்கும். இதன் ஒரு பகுதியாக வருகிற 17ஆம் தேதி காலை குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

உள்ளூர் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்துவருவர். அந்த வகையில் குண்டம் திருவிழா 18 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வான வரும் 17ஆம் தேதி காலை குண்டம் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது.

கொடிமரம் ஏற்றம்

கொடிமரம் ஏற்றும் நிகழ்வு

முன்னதாக, கடந்த சனிக்கிழமை அன்று சர்க்கார் பதிவிலிருந்து 70 அடி உயரம்கொண்ட கொடி மரம் மாசாணியம்மன் முறை தாரர்கள் மூலம் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று காலை (பிப்ரவரி 1) உப்பாறு கரையோரம் பூஜைகள் செய்யப்பட்டன.

பின், முக்கிய வீதிகளின் வழியாக கொடிமரம் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மாசாணி தாயே போற்றி என்ற கோஷங்கள் முழங்க கொடி மரம் ஏற்றப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: 2022ஆம் ஆண்டின் ஸ்பிடக் கஸ்டர் விழா லடாக்கில் தொடங்கியது!

Last Updated : Feb 1, 2022, 6:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details