தமிழ்நாடு

tamil nadu

Chennai Rains: சென்னையில் மழை நீர் தேக்கம் குறித்து எஸ்.பி. வேலுமணி கருத்து

By

Published : Nov 27, 2021, 6:30 AM IST

Updated : Nov 27, 2021, 11:01 PM IST

செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, admk ex minister sp velumani, chennai rain, chennai flood
செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுக ஆட்சியில் எடுத்த நடவடிக்கையினால்தான் இம்முறை சென்னையில் குறைவான இடங்களில் மழை நீர் தேங்கியது என எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: இதய தெய்வம் மாளிகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கோயம்புத்தூரில் கடந்த பத்து ஆண்டுகளாகக் கேட்ட திட்டங்களை எல்லாம் தந்தார்கள். அதிமுக ஆட்சியின்போது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

தற்பொழுது திமுக ஆட்சியில் 300 ஒப்பந்தம் போடப்பட்ட சாலைப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், மக்கள்தான் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தற்போதைய அரசு புதிய திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசின் மீதே குற்றஞ்சாட்டிவருகிறது.

திமுகதான் காரணம்!

அதிமுக ஆட்சியின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையினால்தான் சென்னையில் மூன்றாயிரம் இடங்களில் தேங்கிய மழை நீர், தற்போது 67 ஆக குறைந்துள்ளது.

சென்னையில் குடிநீர்ப் பிரச்சினையே வராத அளவிற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். மழை நீர் தேங்கும் இடங்களில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது சென்னையில் மழை நீர் தேங்க காரணம் தற்போதைய அரசு அங்குள்ள அலுவலர்களை மாற்றிவிட்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஒரு வாரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து வழக்குகளைப் போட்டுவருகிறார்கள். எனது குடும்பத்தினர், நண்பர்கள் எனப் பலரும் நாள்தோறும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்கிறார்கள். என்னை வருகின்ற தேர்தலுக்குள் அரசியலிலிருந்து நீக்க வேண்டும் என்பதற்காகவே செயல்படுகின்றனர்.

என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலையின்றி எதிர்கொள்வேன். கோயம்புத்தூரில் நிலுவையில் உள்ள மக்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளைச் சீர் செய்யாவிட்டால் ஒரு வார காலத்திற்குள் தமிழ்நாடு அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Chennai Rains: மழை வெள்ளம் பாதித்த இடங்களில் முதலமைச்சர் ஆய்வு

Last Updated :Nov 27, 2021, 11:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details