தமிழ்நாடு

tamil nadu

குழந்தைகளை காப்பாற்ற முதலமைச்சர் தனிப்பிரிவில் கோரிக்கை

By

Published : Oct 9, 2021, 8:43 PM IST

புகார் தெரிவிக்க வந்த பெண்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை இறந்த நிலையில், மற்ற இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற உதவுமாறு பெண் ஒருவர் முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.09) முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளிக்க மயிலாடுதுறையைச் சேர்ந்த ஹிலர் நிஷா என்ற பெண் வந்திருந்தார். ஆனால், இன்று விடுமுறை என்பதால் காவல்துறை அதிகாரிகள் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்க அனுமதி வழங்கவில்லை.

இது குறித்து ஹிலர் நிஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தனக்கு 19 வருடங்கள் கழித்து மூன்று குழந்தைகள், ஏழு மாதத்தில் பிறந்தன. குறைமாதத்தில் குழந்தைகள் பிறந்ததால் அதனை தனியார் மருத்துவமனையில் இன்குபேட்டரில் வைத்து பார்த்து கொண்டேன்.

ஒரு நாளைக்கு 1 லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளதால் இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சரிடம் தெரிவித்ததன் பேரில் சென்னை எழும்பூரிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு குழந்தை மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

புகார் தெரிவிக்க வந்த பெண்

குழந்தை இறப்பு

இந்நிலையில் நேற்று (அக்.09) குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்தது. எழும்பூர் மருத்துவமனையில் சரியான மருத்துவ சிகிச்சையளிக்காத காரணத்தினால் தான் குழந்தை இறந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும்.

எங்களின் இரு குழந்தைகளை காப்பாற்ற முதலமைச்சர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து இணையதளம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலினுக்குப் புகார் மனு அனுப்பியுள்ளேன். உடனடியாக முதலமைச்சர் ஸ்டாலின் உதவ வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் கான்வாய் வாகனங்கள் குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details