தமிழ்நாடு

tamil nadu

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM

By

Published : Sep 6, 2021, 9:22 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

காலை 9 மணி செய்திச் சுருக்கம்
காலை 9 மணி செய்திச் சுருக்கம்

1.விநாயகர் சிலைகள் வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்

விநாயகர் சிலைகள் வைத்து, ஊர்வலம் எடுத்து செல்ல அரசு தடை விதித்துள்ளது குறித்து இந்து முன்னனி, பொதுமக்களுடன், டி.எஸ். ஆலோசணை கூட்டம் நடத்தினார்.

2.முறைகேடாக சொத்து சேர்த்த காவல் ஆய்வாளர் மீது வழக்கு

கோயம்புத்தூரில் முறைகேடாக சொத்து சேர்த்த சூலூர் முன்னாள் காவல் ஆய்வாளர் தங்கராஜ் மீது லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

3.குட்டப்பட்டி நாராயணன் மணிமண்டபம் - திறந்து வைத்த எடப்பாடி பழனிசாமி

சேலம் அருகே காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குட்டப்பட்டி நாராயணன் மணிமண்டபத்தை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

4. ஒரே அறையில் தங்கி நண்பரின் பொருள்களை திருடி சென்ற நண்பர்

தர்மபுரி: ஒரே அறையில் தங்கி நண்பரின் லேப்டாப், பணத்தை திருடிய சென்றவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

5. சிறுமியை திருமணம் செய்த விவசாயி கைது

நிலக்கோட்டை அருகே சிறுமியை காதலித்து திருமணம் செய்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

6. பாஜக தலைவர் அண்ணாமலை 'காமெடி பீஸ்' - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

வைகை புயலுக்கு பின் நமக்கு பொழுதுபோக்கு பாஜக தலைவர் அண்ணாமலைதான் என விருதுநகரில் எம்.பி மாணிக்கம்தாகூர் கூறுனார்.

7. அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழா: பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

நாளை (செப்.07) நடைபெற உள்ள பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி கோயில் தேர் திருவிழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. சென்னை அழகுக்கு பல்வேறு நடவடிக்கைகளில் மாநகராட்சி

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள், பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

9. உஸ்பெகிஸ்தான் ஆணகழகன் போட்டியில் கலந்துகொள்ளும் காவலருக்கு காவல் ஆணையர் உதவி!

உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ளும் தலைமை காவலருக்கு, சென்னை பெருநகர ஆணையர், ரூ. 75 ஆயிரம் பணம் வழங்கி உதவி செய்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

10.தொடங்கியது தெலுங்கு பிக்பாஸ் 5- யார் அந்த 19 போட்டியாளர்கள்?

தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 ஆவது சீசன் நேற்று (ஆகஸ்ட் 5) முதல் தொடங்கியது.

ABOUT THE AUTHOR

...view details