ETV Bharat / state

உஸ்பெகிஸ்தான் ஆணகழகன் போட்டியில் கலந்துகொள்ளும் காவலருக்கு காவல் ஆணையர் உதவி!

author img

By

Published : Sep 6, 2021, 7:16 AM IST

உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ளும் தலைமை காவலருக்கு, சென்னை பெருநகர ஆணையர், ரூ. 75 ஆயிரம் பணம் வழங்கி உதவி செய்து தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

தலைமைக்காவலருக்கு உதவி
தலைமைக்காவலருக்கு உதவி

சென்னை: அடையாறில் போக்குவரத்து தலைமை காவலராக பணிபுரிபவர் புருஷோத்தமன். இவர் 2000, 2001 ஆகிய இரண்டு ஆண்டுகள், 2004ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டுவரையிலும் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டார். இதில் 8 முறை மிஸ்டர் தமிழ்நாடு பட்டமும் வென்றுள்ளார்.

அதேபோல் காவல் துறையினருக்காக நடந்த அகில இந்திய போட்டியில் கலந்துகொண்டு வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார். தொடர்ந்து ஆணழகன் போட்டிகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டிவரும் புருஷோத்தமன் அடுத்த மாதம் உஸ்பெகிஸ்தானின், தாஷ்கண்டில் நடைபெறும் உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், நேற்று (செப்.5) மாலை தலைமை காவலர் புருஷோத்தமனை நேரில் அழைத்து, உலக ஆணழகன் போட்டியில் கலந்துகொள்ளவதற்காக, ரூ. 75 ஆயிரம் வெகுமதி வழங்கி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகளும் தெரிவித்தார்.

இதையயும் படிங்க : டெண்டர் முறைகேடு - முன்னாள் நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.