தமிழ்நாடு

tamil nadu

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7 PM

By

Published : Oct 31, 2021, 7:33 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 News @ 7 PM
Top 10 News @ 7 PM

1.இலங்கை கடற்படை மீனவர்களை சுட்டுக்கொல்லும் போது இந்திய கடற்படை என்ன செய்கிறது? - சீமான்

இலங்கை கடற்படை மீனவர்களை சுட்டுக்கொல்லும் போது. இந்திய கடற்படை என்ன செய்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

2.தீபாவளி ஸ்பெஷல் 'அண்ணாத்த சேலைகள்' - விற்பனை ஜோர்!

தீபாவளி பண்டிகைக்கு புதிய ரகமாக 'அண்ணாத்த சேலைகள்' அறிமுகப்படுத்தப்பட்டு, விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

3.சுகாதாரத்துறைக்கு அடுத்த 2 மாதம் சவாலானது - ராதாகிருஷ்ணன்

வடகிழக்கு பருவமழை காலமான அடுத்த 2 மாதங்கள் மிகவும் சவாலானது எனவும், மழைக்காலங்களில் பரவும் நோய்களை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் தயாராக இருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

4.தமிழ்நாடு வரைபடம் வெளியிடப்பட்ட நாளே 'தமிழ்நாடு தினம்' - செல்லூர் ராஜு

கேரள அரசின் எந்த வித அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுக்காமல் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி சாதனை படைத்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வரைபடம் வெளியிடப்பட்ட நாளே 'தமிழ்நாடு தினம்' என்றும் அவர் கூறினார்.

5.நூறுநாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு அமைச்சர் சொன்ன மகிழ்ச்சி தகவல்!

நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களுக்கான ஊதியம், நிலுவைத்தொகை குறித்து ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாகவும், தீபாவளிக்குள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

6.தமிழ்நாட்டில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அரசின் உத்தரவுப்படி நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

7.'தமிழ்நாடு நாள்' அறிவிப்பு மரபு மீறிய செயல் - ஓபிஎஸ்

ஜூலை 18ஆம் தேதியை 'தமிழ்நாடு நாள்' என கொண்டாடப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பு மரபு மீறிய செயல் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

8.நகர்புற உள்ளாட்சி தேர்தல் - உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்...!

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான, சென்னை மாநகராட்சிக்கு 200 வார்டுகளுக்கு உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

9.“நமக்கு நாமே” திட்டம்: அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும் - மாநகராட்சி

“நமக்கு நாமே” திட்டப்பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

10.அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அடிதடி - மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு!

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் நடந்த அடிதடியால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details