தமிழ்நாடு

tamil nadu

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

By

Published : Sep 3, 2021, 2:49 PM IST

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்

1. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்ப!

தமிழ்நாட்டில் இன்று (செப்.3) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

2. 75 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடையை விரிவுப்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 30ஆம் தேதி முதல் 75 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

3. வ.உ.சியின் 150ஆவது பிறந்தநாள்: முதலமைச்சர் அறிவித்த 14 அறிவிப்புகள் என்னென்ன?

வ.உ.சியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சட்டப்பேரவையில் 14 முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

4. மாணவிகளுக்கு கரோனா - பீதியில் பெற்றோர்கள்

நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெற்றோரிடையே அதிர்ச்சியையும், பீதியையும் உருவாக்கியுள்ளது.

5. 'தமிழில் அர்ச்சனை செய்யத் தடையில்லை ' - உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி!

கோயில்களில் எந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது பக்தர்களின் விருப்பத்துக்குள்பட்டது என்றும், தமிழில் அர்ச்சனை செய்ய எந்தத் தடையும் இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

6. விரட்டும் வழக்குகள்... மீரா மிதுன் மீண்டும் கைது!

புழல் சிறையில் உள்ள நடிகை மீரா மிதுனை மேலும் இரண்டு வழக்கில் காவல் துறையினர் கைது செய்தனர்.

7. விவாகரத்தான நபர்கள் குறி... போலி மேட்ரிமோனி தளம் மூலம் கைவரிசையைக் காட்டிய நைஜீரிய கும்பல்!

மேட்ரிமோனி தளம் மூலம் விவகாரத்தான பெண்களைக் குறிவைத்து, தான் ஒரு வெளிநாட்டு மருத்துவர் எனவும் திருமணம் செய்து கொள்வதாகவும்கூறி நூதன முறையில் மோசடி செய்த நைஜீரிய கும்பலைச் சேர்ந்த இருவரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

8. 500 ரூபாய் இருக்கா இந்தா 4ஜி போன் வச்சிக்கோ... ஜியோ அதிரடி!

விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் ஜியோ போன் நெக்ஸ்ட் 4ஜி ஸ்மார்ட்போனை, வெறும் 500 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

9. வெண்கலம் வென்றார் அவனி லெகாரா; மேலும் ஒரு வரலாற்று சாதனை

பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் பிரிவில் இந்தியாவின் அவனி லெகாரா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு முன், 10 மீட்டர் பிரிவில் லெகாரா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

10. வேட்டைக்கு திரும்பினார் புரொஃபசர் - வெளியானது மணி ஹெய்ஸ்ட்

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'மணி ஹெய்ஸ்ட் ' வெப் சீரிஸின் 5ஆவது சீசன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details