தமிழ்நாடு

tamil nadu

விக்ரம் வெற்றி... கமலை வாழ்த்திய மெகா ஸ்டார்... உடனிருந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்...

By

Published : Jun 12, 2022, 1:52 PM IST

விக்ரம்
விக்ரம் ()

'விக்ரம்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் இருவரும் கமல் ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சாதனைப் படைத்து வருகிறது. இந்தத் திரைப்படம் பான் இந்தியப் படமாக வசூலைக் குவித்துவருகிறது. தமிழில் நீண்ட கால இடைவெளிக்கு பிறகு ஆக்சன்ஸ் நிறைந்த நல்ல விருந்தாகவே இந்த படம் அமைந்துள்ளது. இதனால் கமலுக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. .

கமலை வாழ்த்திய நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகர் சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி ட்விட்டரில் வாழ்த்து

அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு கமல் ஹாசனை அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் ஹைதராபாத்தில் சூட்டிங்கில் இருந்ததால் அவரும் நேரில் சென்று கமலுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜும் உடனிருந்தார்.

விக்ரம் படம் வெளியான 8 நாள்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.110 கோடி வசூல் செய்துள்ளது. கமலின் சினிமா கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக மாறிவிட்டது. அத்துடன் 100 கோடி கிளப்பில் இணைந்த தமிழ்நாட்டின் 8ஆவது படமாக முன்னேறியுள்ளது.

இதையும் படிங்க:"சிறந்த சினிமாக்கள் மூலம் உங்களை தொடர்ந்து என்டர்டெய்ன் செய்வேன்" - கமல்ஹாசன்

ABOUT THE AUTHOR

...view details