தமிழ்நாடு

tamil nadu

ரூ.1597.59 கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்

By

Published : Sep 21, 2021, 8:57 PM IST

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஸ்டாலின்
நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஸ்டாலின்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பல்வேறு திட்டங்களின்கீழ் 1597.59 கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்.21) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.1,597.59 கோடி மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகளை, 26ஆயிரத்து 531 பயனாளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், ஊரகக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் 12ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு 255.73 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவசத் தொகுப்பு வீடுகள், 4.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 92 சமூக சுகாதார வளாகங்கள், ஆயிரத்து 293 பயனாளிகளுக்கு 4.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனிநபர் இல்லம் மற்றும் குடிநீர் இணைப்புகள் 129.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளிட்ட 2ஆயிரத்து 217 பணிகள் மேற்கொள்வதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.

திட்டப்பணிகளுக்கான ஆணைகள் வழங்கல்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், 203 பயனாளிகளுக்கு வேலை அட்டையும், 233 பயனாளிகளுக்கு 5.48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆடு, மாடு கொட்டகைகள் அமைத்தல்,

24 பயனாளிகளுக்கு 1.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனிநபர் கிணறுகள் அமைத்தல், 31 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகளுக்கு 7 லட்சம் ரூபாய் நிலுவை ஊதியம் உள்ளிட்ட 411 திட்டப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆணைகளை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் 862.22 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 4ஆயிரத்து 978 சாலைகள், சிறுபாலங்கள் 5.79 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 654 தெருவிளக்குகள், மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 14.13 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 96 பள்ளிக் கட்டடங்கள், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், ஆதிதிராவிடர் குடியிருப்புகள், மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட 4ஆயிரத்து 24 திட்டப்பணிகள் 273.79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கான ஆணைகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஸ்டாலின்

இந்நிகழ்ச்சியில், அரசு வளர்ச்சித் துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மரியம் பல்லவி பல்தேவ் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள்: ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாயிகள் நன்றி

ABOUT THE AUTHOR

...view details