தமிழ்நாடு

tamil nadu

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குன்னூர் விரைந்தார்

By

Published : Dec 8, 2021, 5:22 PM IST

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து குன்னூர் விரைந்தார்.

முதலமைச்சர் குன்னூர் விரைந்தார், ராணுவ ஹெலிகாப்டர் விபத்து,
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை:முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.

அவருடன் 14 பயணித்த 14 பேரில் பேரில் 13 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக இதில், பிபின் ராவத்துடன் அவரது மனைவி பயணம் செய்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து உயர் மட்ட அளவிலான விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித்-ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு களநிலவரத்தை கேட்டறிந்தார். அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் அரசு சார்பில் உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து முதலமைச்சர், மீட்பு பணிகள், விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோயம்புத்தூர் விரைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக குன்னூர் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளார். அவருடன் டிஜிபி சைலேந்திரபாபு சென்றுள்ளார்.

இதையும் படிங்க:முப்படைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து!

ABOUT THE AUTHOR

...view details