தமிழ்நாடு

tamil nadu

'பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்க'

By

Published : Sep 3, 2021, 10:53 PM IST

பொதுச் சொத்துகளைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை:அக்கடிதத்தில் ஸ்டாலின், "நம் நாட்டினுடைய பொதுத் துறை நிறுவனங்கள் நம் அனைவருடைய பொதுச்சொத்தாகும். அவற்றில் பலவும் இந்தியாவைத் தொழில்மயமான - தற்சார்புடைய நாடாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பவை. அந்தகைய பொதுத் துறை நிறுவனங்களை அமைப்பதற்கு மாநிலங்களுக்குச் சொந்தமான அரசு நிலங்களோடு மக்களின் நிலங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதனால் அந்நிறுவனங்களின் மீது மக்களுக்குப் பெருமையும் உரிமையும் உள்ளது. பணமாக்கல் என்னும் நடவடிக்கை நாட்டின் பொருளாதாரத்தின் மீதும்; தொடர்புடைய நிறுவனங்களின் பணியாளர்கள் மீதும்; இந்நிறுவனங்களைச் சார்ந்து இயங்கும் சிறு-குறு தொழில் துறை மீதும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவில்லை.

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

கலந்தாலோசித்து முடிவெடுங்க!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும்போதும் இவ்வளவு பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் நடவடிக்கையை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அது விலைமதிப்பற்ற அரசுச் சொத்துகள் ஒருசில குழுக்கள் அல்லது பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதற்கே வழிவகுக்கும்.

எனவே ஒன்றிய அரசினுடைய பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறும், மேலும் இந்நிறுவனங்களுடன் தொடர்புடையவர்களுடனும் மாநில அரசுகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இதுபோன்ற பெரிய முடிவுகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு கடிதம் எழுதியது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின், "#NationalMonetisationPipeline என்ற பெயரில் விலைமதிப்பற்ற பொதுச்சொத்துகளைத் தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறும்; இத்தகைய பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆயத்தமாகும் 'நாம் தமிழர்' படை!

ABOUT THE AUTHOR

...view details