தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மணிகண்டன் மரணம் - 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ராமநாதபுரம் அருகே காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவன், சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக தென்மண்டல ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவ
கல்லூரி மாணவ

By

Published : Dec 10, 2021, 11:10 PM IST

சென்னை:ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக நீர்க்கோழியேந்தலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கல்லூரி மாணவரை, கீழத்தூவல் காவலர்கள் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

பின்னர் வீடு திரும்பிய மணிகண்டன் திடீரென உயிரிழந்த நிலையில், அவரது மரணத்திற்கு காவல்துறையினரே காரணம் எனக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, உடலை வாங்கவும் மறுத்துவிட்டனர்.

அதே நேரம் மாணவரைத் தாக்கவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்து, சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டது. எனினும், உடலை வாங்க மறுத்துப் பெற்றோரும், ஊர் மக்களும் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பேரில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மறு உடற்கூராய்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உடலைப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக வெளியான பத்திரிகைச் செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த ஆணையத்தின் தலைவரான நீதிபதி எஸ்.பாஸ்கரன், மாணவர் மரணம் தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறை தென்மண்டல ஐஜி 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஜெயலலிதாவின் வேதா இல்லம் தீபா, தீபக்கிடம் ஒப்படைப்பு

ABOUT THE AUTHOR

...view details