தமிழ்நாடு

tamil nadu

ஆசிரியர்களை தேர்தல் பணியில் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நிபந்தனை!

By

Published : Jan 5, 2021, 6:13 AM IST

வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, 50 வயதிற்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் போவதில்லை எனப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறை

சென்னை:தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் பணிபுரிய ஆசிரியர்களின் பட்டியலை, தேர்தல் ஆணையம் கேட்டு உள்ளது. கரோனா தொற்று பரவல் காரணமாக நல்ல உடல் நலத்துடன் உள்ள ஆசிரியர்களை மட்டும் தேர்தல் பணியில் ஈடுபட அறிவுரை வழங்கியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வாக்குசாவடி அலுவலர், வாக்குச்சாவடி கண்காணிப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கான பணிகளை அந்தந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக, 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களை தேர்தல் பணிசெய்வோருக்கான பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதே போல மருத்துவ சிகிச்சைக்கான காரணங்கள் தவிர தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கக் கூடாது எனவும், அவ்வாறு விலக்கு பெறும் ஆசிரியர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பொங்கல் பரிசுக்கான டோக்கனில் அதிமுக தலைவர்கள் படம், சின்னம் இடம்பெறாது'

ABOUT THE AUTHOR

...view details