தமிழ்நாடு

tamil nadu

ONGC பொறியாளரிடம் ஆன்லைன் மோசடி

By

Published : Mar 14, 2022, 1:49 PM IST

ஓஎன்ஜிசி பொறியாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 57 ஆயிரம் பணத்தை ஆன்லைன் மூலம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ONGC பொறியாளரிடம் ஆன்லைன் மோசடி
ONGC பொறியாளரிடம் ஆன்லைன் மோசடி

சென்னை:வடபழனி பகுதியில் வசித்து வருபவர் ஷிகர் சுக்லா(54). ஓஎன்ஜிசி பொறியாளரான இவர் தனது வீட்டில் உள்ள ரெப்ரிஜிரேட்டரை விற்பனை செய்வதற்காக OLX இல் விளம்பரம் கொடுத்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர் ஒருவர் இவரை தொடர்பு கொண்டு விளம்பரத்தை பார்த்ததாகவும், அந்த ரெப்ரிஜிரேட்டரை தான் பெற்றுக் கொள்வதாகவும் கூறி ஒரு லிங்கை அனுப்பியுள்ளார்.

லிங்கை கிளிக் செய்து அதில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் தங்களுக்கு பணம் வந்து சேரும் எனக் கூற, ONGC பொறியாளர் ஷிகர் சுக்லாவும் QR கோடை ஸ்கேன் செய்துள்ளார். சிறிது நேரத்தில் ஓஎன்ஜிசி பொறியாளர் வங்கி கணக்கிலிருந்து ரூ.57 ஆயிரம் பணம் எடுக்கப்பட்ட குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ந்துபோன ஓஎன்ஜிசி பொறியாளர் இந்த சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசிய செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:காவலர்களை கண்டு தப்பியோடிய ரவுடிகள் - போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details