தமிழ்நாடு

tamil nadu

'ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன் அலுவலர்கள் சட்டப்படி நோட்டீஸ்கள் அனுப்புவதில்லை'

By

Published : Feb 11, 2022, 8:27 PM IST

நில ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன் அலுவலர்கள் சட்டப்படி நோட்டீஸ்களை அனுப்புவதில்லை என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

MHC
MHC

சென்னை:கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடப்பட்டும், அலுவலர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் இன்று(பிப்.11) விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் அலுவலர்கள் முன்புபோலல்லாமல், தற்போது கடமையை செய்துவருகின்றனர். அந்த வகையில், இந்த வழக்கு தொடர்பான ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுவருவதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் முன் அலுவலர்கள் சட்டப்படி அறிவிப்புகள், நோட்டீஸ்கள் அனுப்பி நடவடிக்கை எடுப்பது கிடையாது. நேரடியாக அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதால், ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்கின்றனர். இந்த வழக்கிலும் அப்படி நிகழ்ந்திருக்கூடும் என்பதால் என்று தெரிவித்து, இதுகுறித்து மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அடுத்த விசாரணையில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு ரத்து

ABOUT THE AUTHOR

...view details