தமிழ்நாடு

tamil nadu

நைஜீரிய செஸ் வீராங்கனையை உற்சாகத்துடன் வழி அனுப்பிய தமிழ்நாடு போலீசார்

By

Published : Aug 22, 2022, 2:25 PM IST

Updated : Aug 22, 2022, 2:57 PM IST

Etv Bharat
Etv Bharat

தமிழ்நாட்டிற்கு 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வந்தவர்களில் கடைசியாக நைஜீரியாவைச் சேர்ந்த வீராங்கனையை தமிழ்நாடு காவல் துறையினர் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.

சென்னை:கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் ஆக.10 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசு நடத்திய 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து 2,200-க்கும் மேலான வீரர்கள் கலந்து கொண்ட நிலையில் போட்டிகள் நிறைவடைந்த பின்னர் செஸ் வீரர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பினர். இந்நிலையில், நைஜீரியாவைச் சேர்ந்த டோரிட் செமுவா ஒபோவினோ என்ற கடைசி வீராங்கனையை சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் செங்கல்பட்டு காவல் துறை கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமையிலான போலீசார் தமிழ்நாடு காவல் துறையின் சார்பில் வழி அனுப்பினர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நைஜீரியா வீராங்கனை டோரிட் செமுவா ஒபோவினோ, 'செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்தேன். தமிழ்நாடு போலீசார் மிகவும் சிறப்பாகப் பணியாற்றினர். உடல் நலக்குறைவால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட என்னை மருத்துவர்கள் நன்றாக கவனித்தனர். தமிழ்நாட்டிற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது' என்றார்.

தமிழ்நாடு வந்து செல்வதில் மகிழ்ச்சி - நைஜீரிய வீராங்கனை நெகிழ்ச்சி

தொடர்ந்து பேசிய காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், 'செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொண்ட வீரர்களில் கடைசி நைஜீரிய வீராங்கனை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பின் பாதுகாப்பாக வழி அனுப்பப்பட்டார். செஸ் ஒலிம்பியாட்டில் பாதுகாப்புப் பணியில் போலீசார் சிறப்பாகப் பணியாற்றினர்.

உலகத்திலேயே முதன்முறையாக 225 வீரர்கள் தமிழ்நாடு போலீசாரின் பணியைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளது மகிழ்ச்சி. எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. வெளிநாட்டு வீரர்கள் ஆட்டோ, டாக்சிகளில் பயணித்தனர். எந்த வித பாலியல் சம்பவங்களும் நடக்கவில்லை. இதன்மூலம் தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்பது உணர்த்தப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் யாருக்கும் போதைப்பொருள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகள் தங்கி இருந்த இடங்களில் குற்றம் இல்லா தமிழ்நாடாக மாற்றப்பட்டுள்ளது. 4 ஆயிரம் போலீசார் 15 நாட்கள் பணியில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முதலமைச்சரின் கனவை போலீசார் நிறைவேற்றினர்' எனக் கூறினார்.

இதையும் படிங்க: காவலர்களுக்கு 'படா கானா' என்னும் கறி விருந்து - அசத்திய டிஜிபி

Last Updated :Aug 22, 2022, 2:57 PM IST

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details