தமிழ்நாடு

tamil nadu

அரும்பாக்கம் வங்கி கொள்ளையர்களின் சிசிடிவி போட்டோ வெளியானது...

By

Published : Aug 23, 2022, 10:40 AM IST

Etv Bharat
Etv Bharat ()

அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் நகைகளை உருக்க ஆலோசனையில் ஈடுபடும் சிசிடிவி போட்டோ வெளியாகியுள்ளது.

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நகைக்கடன் வங்கியில் கடந்த 13ஆம் தேதி 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வங்கியில் பணியாற்றிய ஊழியர் முருகனே தனது கூட்டாளியுடன் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதனை அடுத்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு முக்கிய கொள்ளையன் முருகன், சூர்யா, சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமரன், நகை வியாபாரி யான கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ரீவத்சவா, அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமுல்ராஜ் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 31.7 கிலோ தங்க நகைகள் முழுவதும் மீட்கப்பட்டது. மேலும், இவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை லாட்ஜில் மறைத்து வைத்து நகையை உருக்க கொள்ளையர்கள் திட்டமிடும் சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளது.

கடந்த 13ஆம் தேதி இரண்டரை மணி அளவில் வங்கிக்குள் புகுந்த கொள்ளை கும்பல், 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளை அடித்து விட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தயார் நிலையில் இருந்த காரில் ஏறி பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள லாட்ஜ்க்கு சென்று தங்க நகைகளை மறைத்து வைத்துள்ளனர்.

பின்னர் நகை வியாபாரி ஸ்ரீ வத்சவா கொண்டு வந்த நகை உருக்கும் மிஷின் மூலம் முதற்கட்டமாக ஒன்றரை கிலோ நகை உருக்கியதும், அறை முழுவதும் புகை மண்டலமாக மாறியதால் கொள்ளையர்கள் நகையை பிரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதற்கு முன்பாக 4.30மணியளவில் நகைகளை லாட்ஜில் மறைத்து வைத்துவிட்டு வெளியே நின்று கொள்ளையர்களான முருகன், சூர்யா, நகை வியாபாரி ஸ்ரீவத்சவா, செந்தில்குமரன் ஆகியோர் திட்டமிடும் சிசிடிவி காட்சி புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தன் மகன்களுடன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...

ABOUT THE AUTHOR

...view details