தமிழ்நாடு

tamil nadu

தொடர் உயர்வைச் சந்தித்து வரும் டீசல் - அரசைச் சாடிய சிவா!

By

Published : Mar 3, 2021, 7:53 AM IST

மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்த்தப்பட்டு, அதன்மூலம் ஏழை மக்களின் பணத்தை அரசு பறித்து பெரும் முதலாளிகளுக்குத் தரும் திட்டமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்வு உள்ளது என மத்திய அரசு மீது திமுக மாநிலங்களவை உறுப்பினர் சிவா குற்றஞ்சாட்டியுள்ளார்.

mp trichy siva speech in chennai
mp trichy siva speech in chennai

செங்கல்பட்டு: பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பம்மலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சட்டப்பேரவை உறுப்பினர் இ. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநிலங்களவை உறுப்பினர் சிவா கலந்து கொண்டு உரையாற்றினர். இக்கூட்டத்தில் பேசிய அவர், அண்டை நாட்டில் தற்போது விற்பனை செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலையை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். இதில் இந்தியாவில் தான் பல மடங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், ஜனநாயகமே இல்லை என்று கூறும் பாகிஸ்தானில் கூட இந்தியாவை விட குறைவாகத் தான் பெட்ரோல் விலை விற்பனை செய்யப்படுவதாகவும், இங்கு அதிக வரி விதித்து 48 ரூபாய்க்கு விற்கவேண்டிய பெட்ரோல், டீசலை மிக அதிக விலைக்கு இங்கு மத்திய அரசு விற்று வருகிறது.

இது மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்த்தப்பட்டு, அரசு அதன்மூலம் ஏழை மக்களின் பணத்தைப் பறித்து பெரும் முதலாளிகளுக்குத் தரும் திட்டமாக உள்ளது என மத்திய அரசு மீது மாநிலங்களவை உறுப்பினர் சிவா குற்றஞ்சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details