தமிழ்நாடு

tamil nadu

'முதலமைச்சர் தமிழ்நாட்டில் 37 மருத்துவக் கட்டடங்களை விரைவில் திறந்து வைப்பார்' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By

Published : May 10, 2022, 9:51 PM IST

தமிழ்நாட்டில் 37 மருத்துவக் கட்டடங்களை பேரவைக் கூட்டத் தொடர்கள் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று (மே 10) தமிழ்நாட்டில் 37 மருத்துவ கட்டடங்களை பேரவைக்கூட்டத் தொடர்கள் முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைக்கவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் ஸ்ரீபெரும்புதூர் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் நாள்தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு போதிய வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதன் முற்கட்டப்பணியாக, காஞ்சிபுரத்தில் இருந்து பூந்தமல்லி வரை உள்ள சாலைகளில் விபத்துகளைத் தடுப்பதற்காக அண்ணா அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படுவதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அவர், ’அண்ணா அரசு மருத்துவமனையில் புதிதாக 9 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் கட்டுமானப்பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

இதையும் படிங்க: 'நான் சத்திரியை' - போலீஸ் எனக் கூறி அடாவடி செய்த பெண்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details