தமிழ்நாடு

tamil nadu

'திமுகவினருக்கு நாக்கில் சனி' - இஸ்திரி போட்ட அமைச்சர் தாக்கு

By

Published : Mar 31, 2021, 4:30 AM IST

திமுகவினருக்கு நாக்கில் சனி பிடித்துள்ளது. அதுவே அவர்களுக்கு எமனாக மாறப்போகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பழைய வண்ணாரப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் பரப்புரை
பழைய வண்ணாரப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் பரப்புரை

சென்னை: ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ஜெயக்குமார் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரிக்ஷாவில் சென்ற அவருக்கு அப்பகுதியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது குழந்தையை தூக்கி வைத்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தார். தொடர்ந்து அப்பகுதியிருந்த இஸ்திரி கடைக்குள் சென்ற அவர், இஸ்திரி தொழிலாளிக்கு உதவியாக துணியை அயன் செய்து கொடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. திமுகவின் கலாசாரமே மறைந்தவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர்கள் ஆகியோரை கொச்சைப்படுத்தி பேசுவதுதான்.

பழைய வண்ணாரப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் பரப்புரை

திமுகவினருக்கு நாக்கில் சனி பிடித்துள்ளது. அதுவே அவர்களுக்கு எமனாக மாறப்போகிறது. நாங்கள் மன்னித்தாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நான் எத்தனை முறை பேட்டி கொடுத்துள்ளேன். எப்போதாவது வாய் தவறி பேசியுள்ளேனா? ஆனால் திமுகவினர் நிதானம் இல்லாமால் பேசுகின்றனர்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details