தமிழ்நாடு

tamil nadu

சங்கரன்கோவிலில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் - அமைச்சர் காந்தி

By

Published : Jan 7, 2022, 1:48 PM IST

சங்கரன்கோவில் தொகுதியில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

சங்கரன்கோவிலில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்
சங்கரன்கோவிலில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் சங்கரன்கோவில் சட்டபேரவை உறுப்பினர் ராஜா, தமிழ்நாட்டில் நெசவு தொழில் பிரபலமாக உள்ள தொகுதியாக சங்கரன்கோவில் உள்ளது.

அதில், 25,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர். எனவே சங்கரன்கோவில் தொகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க அரசு ஆவனம் செய்யுமா? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, "மதுரை, கரூர், நாமக்கல், திருப்பூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா செயல்பட்டு வருகிறது.

இதனால் சங்கரன் கோவில் அமைக்கும் கோரிக்கை எழவில்லை. சங்கரன்கோவில் தொகுதியில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்", என்றார்.

இதையும் படிங்க:தனுஷின் வாத்தி படப்பிடிப்பு தொடக்கம்!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details