தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் காணும் பொங்கலுக்கு 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

By

Published : Jan 14, 2020, 1:37 PM IST

சென்னை: காணும் பொங்கலை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக 480 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

bus
bus

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "காணும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி அன்று சென்னை மாநகரின் சுற்றுலா இடங்களை காண வரும் பொதுமக்களின் வசதிக்காக அண்ணா சதுக்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா, வி.ஜி.பி. கோவளம், மாமல்லபுரம், கிஷ்கிந்தா, குயின்ஸ்லேண்ட், பெசன்ட் நகர், பிராட்வே, தாம்பரம், திருவான்மியூர், எம்.ஜி.எம்., முட்டுக்காடு (படகுக் குழாம்), கிண்டி சிறுவர் பூங்கா, சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறும் தீவுத் திடல் ஆகிய இடங்களுக்கு 480 சிறப்புப் பேருந்துகள் சென்னையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் இயக்கப்பட உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details